வெவ்வேறு பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை மற்றும் சுறா

மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் கடற்கரையில் நேற்று மாலை இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது. ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள், இது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, ஸ்தலத்திற்கு சென்ற உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் திருகோணமலை – குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா மீனின் உடல் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.